தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணா கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலையைத் திறந்து வைத்தபோது அவருடன் கலைஞர், நடிகர் திலீப் குமார், எம்.ஜி.ஆர்., எஸ்.எஸ். வாசன். (ஜனவரி 16, 1969)
அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தமிழ்நாடு முதலமைச்சர் அண்ணாவின் உடல்நிலை குறித்த கவலையுடன் அமர்ந்திருக்கும் தமிழ்நாட்டுத் தலைவர்களுடன் கலைஞர். (ஜனவரி 30, 1969)
கலைஞருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதை ஒட்டி நடைபெற்ற விழாவில் அவருக்கு சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நெ.து. சுந்தரவடிவேலு அவர்கள் பிரிட்டானிகா என்சைக்ளோபீடியா நூல்களை வழங்குகிறார். (ஜூலை 30, 1971)
கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பைப் பார்வையிடும் சர்வோதய இயக்கத் தலைவர் ஜெயபிரகாஷ் நாராயணனுடன் கலைஞர் மற்றும் குடிசை மாற்று வாரியத் தலைவர் இராம.அரங்கண்ணல். (ஜூன் 11, 1972)
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் சஞ்சீவ ரெட்டியுடன் கலைஞர், அருகில் அமைச்சர்கள் க. அன்பழகன், மு. தமிழ்க்குடிமகன் ஆகியோர் உள்ளார்கள். (ஏப்ரல் 30, 1990)
தமிழ்நாடு ஆளுநராகப் பொறுப்பேற்க வருகை தந்த சுர்ஜித் சிங் பர்னாலாவை வரவேற்கிறார் முதலமைச்சர் கலைஞர். அருகில் ஆளுநரின் மனைவியும், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் எம்.எம். ராஜேந்திரனும் உள்ளார்கள். (மே 24, 1990)
அண்ணல் அம்பேத்கர் நூற்றாண்டை முன்னிட்டு, சென்னை சேத்துப்பட்டில் அமைக்கப்பட்ட பாபா சாகேப் அம்பேத்கர் நூற்றாண்டு நினைவு வளைவைத் திறந்து வைக்கிறார் கலைஞர். (ஜனவரி 6, 1991)
கன்னியாகுமரியில் அமைக்கப்பட உள்ள 133 அடி உயரச் சிலையின் மாதிரி வடிவத்தைப் பார்வையிடுகிறார் கலைஞர். அருகில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கே.என். நேரு. (ஜனவரி 22, 1991)
விடுதலைப் போராட்ட வீராங்கனை ருக்மணி லக்ஷ்மிபதி சிலையைத் திறந்து வைக்கிறார் கலைஞர். அருகில் பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன், ருக்மணி லக்ஷ்மிபதி நூற்றாண்டு விழாக் குழுச் செயலர் டாக்டர் பி.ராமமூர்த்தி, ருக்மணி லக்ஷ்மிபதியின் மகள் டாக்டர் இந்திரா ராமமூர்த்தி, முன்னாள் மகாராஷ்டிர ஆளுநர் சி.சுப்பிரமணியம், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எஸ். பொன்னம்மாள். (ஆகஸ்டு 6, 1996)
கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் அவர்களின் 39 ஆவது நினைவு நாள் விழாவில் கலந்து கொண்ட கலைஞர். அமைச்சர்கள் துரைமுருகன், தமிழ்க்குடிமகன், நடிகர் விஜய்காந்த், இயக்குநர் கே. பாலசந்தர் ஆகியோர் உடன் உள்ளார்கள். (செப்டம்பர் 3, 1996)
கலைஞர் இல்லத்தில் அவருடன் உரையாடும் இந்து என். ராம். அருகில் சன்மார்க் குழும நிறுவனத்தின் துணைத் தலைவர் விஜயசங்கர், கெம்பிளாஸ்ட் சன்மார்க் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பி.எஸ். ஜெயராமன். (ஏப்ரல் 19, 2008)